2025 ஏப்ரல் மாதத்தில் மட்டும் 174,608 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை மொத்தமாக 896,884 சுற்றுலாப் பயணிகள் நாடு முழுவதும் வருகை தந்துள்ளனர்.
அதிகபட்ச பயணிகள் வந்த நாடுகள்: இந்தியா – 38,744, ஐக்கிய இராச்சியம் – 17,348, ரஷ்யா – 13,525, ஜெர்மனி – 11,654, அவுஸ்திரேலியா – 10,744, சீனா – 8,667, பிரான்ஸ் – 8,276
இந்த தரவுகள், இலங்கையின் சுற்றுலா துறையின் மீட்சி மற்றும் வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன. குறிப்பாக, பண்டிகை காலங்களில் ஏற்பட்டுள்ள பயணத்தினை முன்னிட்டு வருகை எண்ணிக்கைகள் உயரும் போக்கைக் காணலாம்.

