புத்தளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இனவாதத்தை முற்றாக தோற்கடிக்க புதிய சட்டங்களை கொண்டுவரப் போவதாக தெரிவித்தார். கடந்த கால அரசியல்வாதிகள் இனவாதத்தை பரப்பி மக்களைப் பிளந்துவைத்ததாகவும், தற்போது சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கம் நிலவுவதாகவும் கூறினார்.
இனவாதத்தைச் சமாதானப்படுத்துவதற்கு நடைமுறையிலுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லையென்றும், அதனால் புதிய சட்டங்களை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இனவாதத்துக்கு நாட்டில் இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் உறுதியளித்தார்.
அத்துடன், வெளிநாட்டு அபிவிருத்தித் திட்டங்கள் மீண்டும் ஆரம்பமாக உள்ளன என்றும், நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

