இலங்கையில், அதிபர் பதவியில் சேர்ந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆங்கில மொழிப் புலமை பெறாத அதிபர்களின் சம்பள உயர்வும், பதவி உயர்வும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஒன்றின் படி, சம்பள உயர்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஒரு அதிகாரி, தரம் II பதவிக்கு உயர்வு பெற திட்டமிடப்பட்ட திகதிக்குள் ஆங்கிலத்தில் தேவைப்படும் தகுதிகளைப் பெறத் தவறினால், அவர் பதவி உயர்வுக்குத் தகுதி பெறும் திகதியிலிருந்து தாமதமான கால அளவு வரை அந்த உயர்வு தாமதமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பொது சேவை ஆணைக்குழு சுற்றறிக்கை எண் 08/2020-இன் அடிப்படையில், சாதாரண தரத்தில் (O/L) ஆங்கிலத்தில் குறைந்தது “சிறப்புத் தேர்ச்சி” பெற்றவர்களுக்கு இந்த புதிய கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2008ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இலங்கை அதிபர் சேவையின் புதிய சேவை விதிமுறைகள் படி, அரச மொழியான ஆங்கிலத்தில் புலமை பெறுவதே கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.