2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (A/L) பெறுபேறுகள், ஏப்ரல் புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.பரீட்சை பெறுபேறுகள் குறித்து ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் இதை தெரிவித்தார்.
மொத்தம் 333,183 மாணவர்கள் இந்த பரீட்சையில் பங்கேற்றனர்.இதில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள்.79,793 பேர் தனியார் பரீட்சார்த்திகள்.பரீட்சை நாட்கள்: 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரை.பரீட்சை மையங்கள்: 2312 மையங்களில் நாடு முழுவதும் பரீட்சை நடைபெற்றது.
செயல்முறை (Practical) பரீட்சை: பெப்ரவரி 8 முதல் 10 ஆம் திகதி வரை நடைபெற்றது.