யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா தனது அபாரமான ஞாபக சக்தியால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
1000+ தமிழ் சொற்களுக்கு ஆங்கிலத்தில் துல்லியமான அர்த்தம் கூறும் திறன்.
விலங்குகள், காலநிலை, தொழில்கள், மின்னணு சாதனங்கள் போன்ற தலைப்புகளில் விரிவான அறிவு.பாடசாலை செல்லாத நிலையிலும் அசாதாரண ஞாபக திறமை வெளிப்படுத்தல்
சிறுமியின் இந்த அற்புதமான திறனை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யும் முயற்சியில் அவரது பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.
சிறுமியின் தந்தை முச்சக்கரவண்டி ஓட்டுநர் மற்றும் தாய் குடும்பப் பெண் என சாதாரண குடும்பத்தை சேர்ந்துள்ள போதிலும், அவர்களின் மகள் கொண்டுள்ள இந்த ஆச்சரியமான அறிவுத்திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய ஊடக சந்திப்பில், பெற்றோர் மகளின் திறமைக்கு மேலதிக கவனம் கிடைக்க வேண்டும் என்றும், இதற்கு தகுந்த அனுசரணை வழங்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

