ஹரியானா மாநிலத்தின் ரோதக் பகுதியில் ஒருவர், தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்த வாடகையாற்றியை உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரோதக்கைச் சேர்ந்த ஹர்தீப், தனது சொந்த வீட்டின் ஒரு பகுதியை ஜக்தீப் என்ற யோகா ஆசிரியருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார்.ஜக்தீப் அடிக்கடி ஹர்தீப்பின் மனைவியோடு தொடர்பில் இருந்ததால், இருவருக்கும் இடையே ரகசிய உறவு ஏற்பட்டது.இதை அறிந்த ஹர்தீப், தனது நண்பனுடன் சேர்ந்து யோகா ஆசிரியரை கொலை செய்ய திட்டமிட்டார்.
திட்டமிட்டு ஜக்தீப்பை கடத்திச் சென்ற ஹர்தீப், தனது வீட்டருகே 7 அடி ஆழமான குழியில் உயிருடன் புதைத்தார்.
சம்பவத்திற்குப் பிறகு, ஜக்தீப்பை காணவில்லை என அவரது உறவினர்கள் புகார் அளித்தனர்.
பொலிஸ் விசாரணையில் ஹர்தீப் குற்றம் ஒப்புக் கொண்டார்.அவரும், குற்றத்தில் உதவிய அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.யோகா ஆசிரியரின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த கொடூர சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.