நாட்டின் சனத்தொகையில் 50 சதவீதமானவர்களே நாள் ஒன்றில் இரண்டு தடவைகள் பல்துலக்குவதாக இலங்கை பல் வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வருடம் ஒன்றில் சுமார் மூவாயிரம் பேர் வாய்புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். வாய்ப்புற்று நோய் காரணமாக நாள் ஒன்றில் மூன்று பேர் மரணிக்கின்றனர்.
வாய் சுகாதாரம் தொடர்பில் பொதுமக்கள் அக்கறையின்றி செயற்படுகின்றனர். இதன் காரணமாக வாய் சார்ந்த நோய்கள் அதிகளவில் ஏற்படுகின்றன.
எனவே, நாள் ஒன்றில் இரண்டு தடவைகள் பல்துலக்கும் முறைமையை கடைப்பிடிக்குமாறு இலங்கை பல் வைத்திய சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்னாயக்க வலியுறுத்தியுள்ளார்.