இலங்கையில் இதுவரை 10,155 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகளவான நோயாளர்கள்(2975 பேர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
மேலும் கொழும்பு மாவட்டத்தில் 2215 பேரும் கம்பஹா மாவட்டத் தில் 891 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 572 பேரும் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.