இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் ஸ்ருதிஹாசனின் முழு சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தன் தந்தையை போலவே சினிமாவில் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல டாப் ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். இருப்பினும் தற்போது தமிழில் பட வாய்ப்புகள் சற்று குறைவாக இருப்பதால் பாலிவுட் மற்றும் டோலிவுட் பக்கம் சென்று விட்டார்.
இன்றைய தினம் நடிகை ஸ்ருதிஹாசன் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவில் தந்தை முன்னணி நடிகராக கலக்கி சொத்துக்கள் சேர்த்தாலும் ஸ்ருதிஹாசன் தனது 21வது வயதில் இருந்தே வேலைகள் செய்து தன்னை பார்த்துக் கொள்வதாக பல பேட்டிகளில் ஓபனாக பேசியிருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் தனியாக சம்பாதித்து மொத்தமாக ரூ. 80 முதல் ரூ. 90 கோடி வரை சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சொகுசு பங்களா வைத்திருப்பவர் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளார். அவரிடம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ஆடி க்யூ 7 போன்ற சொகுசு கார்களும் இருக்கின்றன.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.