பொதுவாக ஒரு வீட்டில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் டீ பிரியர்களாக இருப்பார்கள்.
அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். ஒரே சுவையில் டீ போடும் பொழுது அது நாளடைவில் சலிப்பை உண்டுபண்ணும்.
சிலருக்கு ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படலாம். இதனால் டீயுடன் சில மூலிகை பொருட்களை சேர்த்து கொள்ளலாம். இது உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
சளியால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் இஞ்சி, மிளகு இரண்டையும் டீயுடன் சேர்த்து குடித்தால் நெஞ்சு சளி இறங்கி நிரந்தரமான நிவாரணம் கிடைக்கும். அத்துடன் இருமல், தொண்டை வலியும் குறையும்.
அந்த வகையில், நெஞ்சு சளியை முறியடிக்கும் டீயை எப்படி தயாரிப்பது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைக்கவும். அதில், இஞ்சி, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் டீத்தூள் கலந்து விடவும். 3-4 நிமிடம் வரை நன்றாக கொதித்த பின்னர் பாலை ஊற்றி தேவையான அளவு டிகாஷனை போடவும்.
அதில் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
கடைசியாக டம்பளரில் வடிக்கட்டி குடித்தால் சுவையான இஞ்சி, மிளகு டீ தயார்!
குழந்தைகளுக்கு ஒரு அளவாக கொடுக்கவும். அளவுக்கு அதிகமான காரம் இருந்தால் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும்