யாழ். நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது.
இந்நிலையில் கைதான சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.