அனைத்து வகையான மதுபானங்களின் மீதான வரியை 6 சதவீதங்களால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று (10) நள்ளிரவு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, 750 மில்லி சிறப்பு மதுபான போத்தலின்; விலை குறைந்தது 106 ரூபாயினால் அதிகரிக்கும். ஏனைய வகை மதுபானங்களின் விலையும் 5 வீதத்தால் அதிகரிக்கும்.
இதேவேளை வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று முதல் 2025 முதல் சிகரெட் விலை உயர்த்தப்படும் என்று சிலோன் டுபேக்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி கேப்ஸ்டன் மற்றும் ஜோன் பிளேயர் சிகரெட்டுகளின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கும், அதே நேரத்தில் 83 மிமீ கோல்ட் லீஃப் 10 ரூபாயினால் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.