பிக்பாஸ் வீட்டில் ஜாக்குலின் செய்த சாதனை ரசிகர்கள் மத்தியில் பெறும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற அடைமொழியுடன் புதியதாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது 80 நாட்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8.
இந்த நிகழ்ச்சி இன்னும் 3 வாரங்களில் முடிவுக்கு வரவிருக்கிறது.
இந்த நிலையில், பிக்பாஸ் 8 வீட்டில் அருண் பிரசாத், முத்துக்குமரன், ரயான், ராணவ், விஜே விஷால், தீபக், மஞ்சரி, சௌந்தர்யா, பவித்ரா, ஜாக்குலின் உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
இவர்களில் யார் டைட்டிலை ஜெயிக்கப்போவது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் “டிக்கெட் டூ பினாலே” டாஸ்க் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரங்களில் நண்பர்களாக பிக்பாஸ் வீட்டை ஆட்டி படைத்த சௌந்தர்யா – ஜாக்குலின் இருவரும் தற்போது பிரிந்து விளையாட ஆரம்பித்துள்ளனர்.
இந்த வாரம் ஜாக்குலினை சௌந்தர்யா மற்றும் விஷால் இருவரும் நாமினேட் செய்துள்ளனர். இவர்கள் கடந்த வாரங்களில் தன்னுடன் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இதனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஜாக்குலின் மனமுடைந்து இருக்கிறார்.
இப்படியொரு சமயத்தில் ஜாக்குலின் செய்த சாதனையொன்று இணையவாசிகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
அதாவது, பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் ஜாக்குலின் விளையாடிய 13 வாரங்களில் 13 வாரமும் நாமினேஷனுக்கு தெரிவாகியுள்ளார்.
இவர், கடந்த சீசன்களில் அதிகமாக நாமினேட் செய்யப்பட்ட பாவனி ரெட்டியை தோற்கடித்து விட்டு இந்த நிலைக்கு வந்துள்ளார். ஆனால் 13 வாரங்கள் நாமினேட் செய்யப்பட்டாலும் மக்கள் வாக்களித்து ஜாக்குலினை காப்பாற்றி வருகிறார்கள்.