தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டு இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, ஹீரோயிசம் காட்டாமல் தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்த்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
ஹீரோ, வில்லன், ஹீரோவின் நண்பன், குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடித்து ரசிகர்களுக்கு ஒரு உணர்வை கொடுப்பார்.இவர் கோலிவுட்டில் மிகவும் பிரபலமான ஒரு கதாநாயகன்.
இவர் நடிப்பில் தமிழில் சூது கவ்வும், கருப்பன், பீட்சா, சேதுபதி, சூப்பர் டீலக்ஸ், விக்ரம் வேதா போன்ற திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. தென்மேற்கு பருவக்காற்று எனும் படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது.
இவர் நடித்த படத்திலேயே அதிக வசூலை பெற்ற படமாக ஜவான் படம் அமைந்தது. இது ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. தற்போது இவர் ஒரு பிஸியான நடிகராக தாறி பல கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.
இது தவிர பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் விஜய் சேதுபதிக்கு ரூ.60 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கே விஜய் சேதுபதிக்கு ரூ.30 கோடி சம்பளதாக வழங்கப்படுகின்றது.
இவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி 14 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது வரை அவர் 50 படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இவரது மொத்த சொத்து மதிப்பு 140 கோடி உள்ளது.சென்னையில் சொந்தமாக ரூ.50 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா உள்ளது.
இது தவிர சென்னையில் கீழ்பாக்கம், என்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இவருக்கு சொந்தமாக 100 ஏக்கருக்கு மேல் இடங்கள் உள்ளது.மினி கூப்பர், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், இனோவா, பென்ஸ் போன்ற சொகுசு கார்களும் உள்ளன.