பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன ஆர்.ஜே.ஆனந்திக்கு வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 9 வாரங்களைக் கடந்து 10வது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒரே வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட்டாவது வழக்கம் தான்.
மாறாக இந்த சீசனில் முதல் 8 வாரம் டபுள் எவிக்ஷனே நடக்காமல் 9-வது வாரத்தில் டபுள் எவிக்ஷன் என அறிவித்து டுவிஸ்ட் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. பிக்பாஸ் 8 வொர்ட்டிங்கின் படி குறைவான வாக்குகள் பெற்று அடுத்தடுத்து இருந்த சாச்சனா, ஆர்.ஜே.ஆனந்தி ஆகிய இருவரும் நேற்றைய தினம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக குறைவான வாக்குகள் பெற்றிருந்தாலும் காப்பாற்றப்பட்டு வந்தனர். இப்படியொரு சமயத்தில் இந்த வாரமும் இவர்கள் காப்பாற்றப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்றை தினம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கே ஷாக் கொடுக்கும் விதமாக இருவரும் எவிக் செய்யப்பட்டனர்.
அத்துடன், எலிமினேஷனை அறிவிக்கும் முன்னர் போட்டியாளர்கள் மனதில் யார் இருக்கிறார்கள் என விஜய் சேதுபதி கேட்ட போது பெரும்பாலானோர் சொன்னது ரயான் மற்றும் சத்யாவின் பெயர்கள் தான்.
அதில் ஒருவர் கூட ஆர்.ஜே.ஆனந்தி பெயரையோ, சாச்சனா பெயரையோ சொல்லவில்லை. அதனால் அவர்களுக்கே இந்த டபுள் எவிக்ஷன் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. நேற்றைய தினம் முதலில் ஆர்.ஜே.ஆனந்திஎலிமினேட் செய்யப்பட்டார். இதனை பார்த்த அவரது தோழிகளான பவித்ரா, அன்ஷிதா ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர்.
இந்த சமயத்தில், ஆர்.ஜே.ஆனந்தி அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு புன்னகையோடு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். டபுள் எவிக்ஷனில் சிக்கி எலிமினேட் ஆன ஆர்.ஜே.ஆனந்தி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில், ஆனந்திக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். அவர் மொத்தம் விளையாடிய 63 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார். இதற்காக ஆனந்திக்கு 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இதுவரை எலிமினேட் ஆன போட்டியாளர்களில் அதிக சம்பளத்துடன் வெளியேறிய போட்டியாளர் ஆர்.ஜே.ஆனந்தி என்றும் இவருடன் வெளியேறிய சாச்சனா ஒரு எபிசோடுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.