தேன் சாப்பிடுவதால் சுவை மட்டுமின்றி, உடலுக்கு ஊட்டசத்துக்களும் கிடைக்கின்றன.
அதுவும் குறிப்பாக, ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படும் தேன் மருத்துவத்தில் முக்கிய இடம் பிடிக்கிறது.
தேனில் வைட்டமின்கள், புரதங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் தொடர்புடையது. அத்துடன் நம்முடைய உடலில் இருக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வேலையை தேன் செய்கிறது.
இத்தகைய சூழலில், குளிர்காலத்தில் தேன் சாப்பிடுவது உடல் ஆரோக்கியம் மேம்படும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில், குளிர்காலத்தில் தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் ஏகப்பட்ட நோய்கள் குணமாகும் என்ற கருத்து பரவலாக உள்ளது.
அப்படியாயின் தேன் சாப்பிடுவதால் என்னென்ன நோய்க்ள குணமாகும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. தேன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் குளிர்காலத்தில் உதவியாக இருக்கின்றது. அந்த வகையில், ஒரு ஸ்பூன் தேனில் சிறிதளவு மஞ்சள் மற்றும் இஞ்சி சாறு சேர்த்து சாப்பிட்டால் தொற்று நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.
2. குளிர் காலத்தில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் சளி மற்றும் இருமல் குணமாகும். ஏனெனில் தேனில் ப்ரீபயாடிக் பண்புகள் உள்ளது. அந்த வகையில், சூடான மூலிகை தேநீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், குளிர் காலத்தில் ஏற்படும் தொண்டை பிரச்சினை குணமாகும்
3. தேனில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையை குணப்படுத்தும். இதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி தேன் எடுத்து கொள்வது சிறந்தது.
4. தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் குளிர்காலத்தில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சினையை சரிசெய்கிறது. தேனை சிறிதளவு மஞ்சள் நீரில் கலந்து குடித்தால் அலர்ஜி பிரச்சனைகள் குணமாகும்.
5. குளிர்காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனையை தேன் கட்டுக்குள் கொண்டு வருகின்றது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனின் சிலருக்கு தவறான உணவுப்பழக்கங்கள் காரணமாக வாயு மற்றும் அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற வயிறு பிரச்சினைகள் அடிக்கடி வரும். இதனை வெறும் வயிற்றில் தேன் சாப்பிடுவதால் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.