இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப்பந்த், கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
கடந்த 8ஆம் திகதி பி.சி.ஆர். பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்த ரிஷப்பந்த், எதிர்வரும் 18ஆம் திகதி வரை சுயதனிமையில் இருப்பார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ëஆமாம், ஒரு வீரர் நேர்மறையை சோதித்தார். ஆனால் அவர் கடந்த எட்டு நாட்களாக தனிமையில் இருக்கிறார். அவர் அணியுடன் எந்த ஹோட்டலிலும் தங்கவில்லை, எனவே வேறு எந்த வீரரும் பாதிக்கப்படவில்லைí என கூறினார்.
அதேவேளை ரிஷப்பந்த், அணியினருடன் டர்ஹாமிற்குப் பயணிக்க மாட்டார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றுகள் குறித்து எச்சரிக்கும் வகையில் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா, இங்கிலாந்தில் உள்ள 23பேர் கொண்ட குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் இந்த செய்தி வந்துள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 04ஆம் திகதி ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.