காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் வாக்குச்சீட்டைப் புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவன் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஞன் வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று தனது வாக்குச்சீட்டில் அடையாளமிட்டு பின்னர் அதனைப் தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் அது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

