அம்பாறை வளத்தாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சாய்ந்தமருதை சேர்ந்த பிரபல மோட்டார் சைக்கிள் விற்பனையாளர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று மதியம் அம்பாறை வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது விபத்துக்குள்ளான நபர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தொழில் நிமித்தம் அம்பாறைக்கு சென்ற வேளையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.