கோவையில் அடிக்கடி தொலைபேசியில் பேசிய மகளின் தலையில் கல்லைப்போட்டு தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கோவை காரமடை அருகே உள்ள கணுவாய்ப்பாளையத்தை சேர்ந்தவர் நாகமணி (47). இவரது மகள் நதியா (31). இவருக்கு, சரவணகுமார் என்பவருடன் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அத்தோடு இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் சரவணகுமார் உயிரிழந்ததால், நதியா தனது தாயார் வீட்டில் வசித்துள்ளார்.
மேலும் இந்த நிலையில், நதியா அடிக்கடி தொலைபேசியில் ஆண் நண்பர்களுடன் பேசி வந்தததோடு, குழந்தைகளையும் சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார்.
இதனால் நாகமணி மகளை வீட்டைவிட்டு வெளியேற்றினார். பின்பு சமீபத்தில் மீண்டும் தனது வீட்டிற்கு வந்த நதியா வழக்கம்போல் செல்போனில் ஆண் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார்.
மேலும் இதனால் ஆத்திரமடைந்த தாய் நாகமணி, மது அருந்திவிட்டு சென்று நதியாவுடன் தகராறில் ஈடுபட்டதோடு, இரவில் தூங்கிக்கொண்டிருந்த மகளின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
அத்தோடு தகவலறிந்து வந்த பொலிசார் நாகமணியை கைது செய்ததோடு, நதியாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றன