நடிகை ரம்யா பாண்டியனுக்கு அடுத்த மாதம் கல்யாணம் நடக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
இவர், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், ஆண் தேவதை, நண்பகல் நேரத்து மயக்கம் என சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், சினிமாவில் இருந்து விலகி திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற முடிவில் ரம்யா பாண்டியன் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
அந்த வகையில், அவர், லாவால் தவான் என்பவரை தான் திருமணம் செய்ய போகிறாராம். தவான் யோகா பயிற்சி மாஸ்டராக இருக்கிறாராம். வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்க நினைப்பவர்களுக்கு வழிகாட்டும் இடத்தில் தான் தவான் இருக்கிறார்.
இவருடன் ரம்யா பாண்யனுக் எதிர்வரும் நவம்பர் 8ம் தேதி இமயமலை ரிஷிகேஷ் அருகில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல், அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.

