பொதுவாக அன்னாசிப்பழம் கோடைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும்.
இந்த பழத்தில் இருக்கும் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை அதிகமாக கவரும். அத்துடன் கவர்ந்திழுக்கும் நறுமணமும் அன்னாசிப்பழத்தில் அதிகமாக உள்ளது.
வெப்பமண்டல பழமான அன்னாசியை வைத்து தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம் என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஏனெனின் சமீபக் காலமாக தலைமுடி உதிர்வு பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணக்கை அதிகமாகியுள்ளது. சிலருக்கு உச்சந்தலையில் வீக்கம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
அப்படியானவர்கள் இதற்கு அன்னாசிப்பழத்தை வைத்து எப்படி வைத்தியம் செய்யலாம் என்பதனை தெரிந்து கொள்வோம்.
1. அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி சத்து உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்துகின்றது. இதனால் அன்னாசிப்பழம் சாப்பிடும் பொழுது தலைமுடி ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகின்றது.
2. அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன, இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போராடும். அத்துடன் உரோமக்கால்கள் சேதமடையாமல் பாதுகாக்கும்.
3. அன்னாசிப்பழம் சாப்பிடும் நபருக்கு தலைமுடி உதிர்வு குறைவாகவே இருக்கும். அத்துடன் அன்னாசிப்பழம் பேஸ் மாஸ்க் கூட தேன் கலந்து முகத்தில் தடவலாம். இதனால் உச்சந்தலைக்கு கூடுதல் ஆக்ஸிஜனேற்ற பலன் கிடைக்கும்.
4. உச்சந்தலையில் நீரேற்றம் சரியாக இருந்தால் தலைமுடி பிரச்சினைகள் குறைவாக இருக்கும். ஏனெனின் அன்னாசிப்பழத்தில் தேவையான நீர்ச்சத்துக்கள் உள்ளன. நன்கு நீரேற்றமடைவதால் உச்சந்தலையில் வறட்சி மற்றும் உதிர்தல் குறைவாகவே இருக்கும்.
5. கடந்த 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், , உச்சந்தலையில் நுண்ணுயிரிகள் செழிப்பாக வளரும். அந்த சமயத்தில் தலையை ஈரழிப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

