தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் காதலித்து 2017ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.
4 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் 2021ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த விவாகரத்துக்கு பல சர்ச்சைகள் எழுந்தன. சமீபத்தில் கூட தெலங்கானா அமைச்சர் ஒருவர் சமந்தா குறித்து அவதூறாக பேசினார். அதற்கு சமந்தா தகுந்த பதிலடி கொடுத்தார்.
சமந்தாவுடனான விவாகரத்துக்கு பின் நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துளிபாளா என்பவருடன் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில், தற்போது நிச்சயம் ஆகி, விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
இந்நிலையில், பிரபல நடிகை சர்மிளா தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சமந்தா குறித்து பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
அதில், “சமந்தா விவாகரத்துக்கு முக்கிய காரணம் அவர் திருமணத்திற்கு பிறகும் கிளாமர் ரோல் எடுத்து நடித்தது தான் என்று சொல்கிறார்கள். ஆனால், இவை அனைத்தும் தெரிந்து தான் நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதுமட்டுமில்லாமல், சமந்தா மட்டும்தான் கிளாமர் ரோல் எடுத்து நடித்தாரா என்ன, நாகார்ஜுனாவின் மனைவி அமலாவும் தான் அவர் நடித்தபோது கிளாமர் ரோல் செய்திருக்கிறார்.
அவ்வாறு இருக்க இதில் சமந்தாவை மட்டும் குறை கூற முடியாது. சமந்தாவுக்குத்தான் ரசிகர்கள் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, அதனால் இருவரும் பிரிந்ததற்கு ஈகோ கிளாஷ்தான் காரணம்” என்று கூறியுள்ளார்.

