TJ ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் வெளிவருகிறது என்றால், கண்டிப்பாக அப்படம் மக்களின் வாழ்வியலை சார்ந்த ஒன்றாகும், மக்களின் வலியை பேசும் படமாகவும் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படம் வருகிற 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.
இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். இவர்கள் இருவரும் இணைந்து Andhaa Kaanoon, Hum ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள வேட்டையன் படத்தில் ரஜினியுடன் நடிப்பதற்காக அமிதாப் பச்சன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக அமிதாப் பச்சன் ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

