பிரித்தானியா இளவரசர் பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இளவரசர் Philip(99) உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த செவ்வாய் கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை குறிப்பிட்டுள்ளது.
இவர், லண்டனில் உள்ள King Edward VII மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அரண்மனை வட்டாரம் கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே Philip உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். ஆனால், அது கொரோனா வைரஸுடன் தொடர்புடையது கிடையாது எனவும், அவர் நல்ல மனநிலையில் இருப்பதாகாவும், அங்கு அவர் சில நாட்கள் ஓய்வெடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராணி தற்போது Windsor-ல் இருக்கிறார். கடந்த மாதம் இளவரசர் பிலிப் மற்றும் மகாராணி கொரோனாவிற்கான தடுப்பூசியை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.