எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆதரிக்கும் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகளாக பிளவுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக, தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிக்க கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தீர்மானித்துள்ளார்.
இதனால், இந்த நெருக்கடி அதிகரித்துள்ளது. தனிப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே தாம் இந்த முடிவை எடுத்ததாகவும், தமது சொந்த ஜனாதிபதி வேட்பாளரை முன்வைப்பதே வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு எனவும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும், மேலும் சிலர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கின்றனர்.