கணவரின் காதலியால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கணவரின் காதலிக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மனைவி தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மும்பையை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரின் காதலியால் மன உளைச்சலுக்கு ஆளானதால், குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.
ஒரு பெண் கணவரின் உறவினரால் குடும்ப வன்முறைக்கு ஆளானால் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் இந்திய தண்டனைச் சட்டம் 498ஏ கூறுகிறது.
இந்த வழக்கு நேற்று முன் தினம்(22) மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கணவரின் காதலி உங்களுக்கு எந்த விதத்திலும் உறவினர் இல்லை என்று வழக்கு தொடர்ந்த பெண்ணிடம் கூறி வழக்கை ரத்து செய்தது.
கணவரின் சட்டத்திற்கு புறம்பான உறவு என்பதால் இந்த குற்றப்பத்திரிகையே சட்டவிரோதமானது என்றும் , கணவரின் உறவினர் உங்களுக்கு மன உளைச்சல் தந்தால் தண்டிக்கலாம், ஆனால் கணவரின் காதலி என்பது உங்களுக்கு உறவினர் அல்ல என்று நீதிபதி தனது தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.