யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று (09) 5,957 ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்பாணம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரண்டாம் கட்டமாக கிடைக்கப்பெற்ற 50 ஆயிரம் கொரோனாத் தடுப்பூசி மருந்துகளில் நேற்று ஐந்தாவது நாளில் 7,266 பேர் தமக்கான முதலாவது டோஸைப் பெற்றுக் கொண்டனர். கடந்த ஐந்து நாள்களில் 45,722 பேர் கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 10,354 ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் உள்ளதாக விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்களில் 5,957 பேருக்கு நேற்று கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டது. இது மொத்த உத்தியோகத்தர்களில் 57.53 சதவீதம் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.