இந்தியா பெங்களூருவில் 18 வயது இளைஞனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய 5 திருநங்கைகளை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள டிஜி ஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளைஞன் தேநீர் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடைக்கு தேநீர் அருந்த வந்த சில திருநங்கைகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த இளைஞனிடம் , அதிக வருமானம் ஈட்டுவதற்கான வேலை தங்களிடம் இருப்பதாக ஆசைவார்த்தை கூறிய நிலையில் இளைஞன் மறுப்பு தெரிவிக்க, திருநங்கைகள் வலுக்கட்டாயமாக அவரை கடத்திச் சென்றுள்ளனர்.
தெருக்களில் பிச்சை எடுக்க வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 12-ஆம் திகதி இரவு திருநங்கைகள் குறித்த இளைஞன் வசிக்கும் இடத்திற்கு சென்று, ஒரு ஆண் பிச்சைக்காரராக நீ ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளாய். பெண் பிச்சைக்காரராக இருந்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என எண்ணிப்பார் என்று தெரிவித்துள்ளனர்.
எனினும் இளைஞன் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, வலுக்கட்டாயமாக திருநங்ககைள் இளைஞனுக்கு சில ஊசிகளை செலுத்தியதால இளைஞர் மயக்கம் அடைந்துள்ளார்.
மயக்கம் தெளிந்த பின்னர் அவரது அந்தரங்க பகுதி கத்தியால் வெட்டியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின்ன ஆகஸ்ட் 3 ஆம் திகதி வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த அந்த இளைஞனை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
எப்படியோ அங்கிருந்து தப்பித்த இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் முறைபாடளித்த நிலையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஐந்து திருநங்கைகளையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.