நம்மில் பெரும்பாலோர் இந்த செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலாவை பெரும்பாலும் சாப்பிட்டிருக்க மாட்டோம்.
இந்த செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன்- 1 kg
- தனியா- 5 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- மிளகு- 5 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 2
- எண்ணெய்- 3 ஸ்பூன்
- பட்டை- 1 துண்டு
- ஏலக்காய்- 3
- கிராம்பு- 5
- வெங்காயம்- 4
- இஞ்சி பூண்டு- 1 ஸ்பூன்
- தக்காளி- 3
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- கறிவேப்பிலை- 2 கொத்து
- உப்பு- தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் தனியா, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.
பின் இதனை ஒரு தட்டில் கொட்டி ஆறவைத்து இதனை ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.
இதனைத்தொடர்ந்து இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி இதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின் இதில் கழுவி வைத்த சிக்கன் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு சிக்கனை வேக வைக்க அரை லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.
மிதமான தீயில் 15 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு பின் அரைத்த வைத்திருக்கும் மசாலாவில் இருந்து 5 ஸ்பூன் சேர்க்கவும்.
அடுத்து இதில் கறிவேப்பிலை சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு கடாயை மூடி விட்டு 10 நிமிடங்களுக்கு சிக்கன் நன்கு வேகவைக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான செட்டிநாடு சிக்கன் மிளகு மசாலா ரெடி.