பிரபல திரைப்பட நடிகையான ராதா, தன்னுடைய கணவர் மீது மீண்டும் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
தமிழில் முரளி, வடிவேலு நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ராதா, அதன் பின் சினிமாவில் அந்தளவிற்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்,இதையடுத்து, ராதா சப்-இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா என்பவரை இரண்டாவதாக திருணம் செய்து கொண்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கடந்த ஏப்ரல் மாதம் அவர் மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதன்பிறகு இருவரும் சமாதானமாகி சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ராதா புகார் அளித்துள்ளார்.
அதில், தான் ஏற்கனவே கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் உள்ள தனது நண்பர்களை வைத்து அழித்து விட்டதாக கூறிய வசந்தராஜா புகார் கொடுத்து என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். வசந்தராஜா மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் இளம்வருதி, பாரதி ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.