பெண்களே வேண்டாம் என கூறி பதறி ஓடும் நபர் ஒருவர் தொடர்பில் தகவ்ல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவில் வசித்து வரும் கலிக்ஸ்டே நஸம்விதா. 71 வயது முதியவரான இவர் பல வருடங்களாக மக்களுடன் பெரிதாக பழகாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்.
இவருக்கு இளம் வயதில் இருந்தே பெண்களை பார்த்தாலே பயம் ஏற்படும் மனநோய் இருந்து வருகிறது. இதனால் எந்த பெண்ணின் அருகிலேயும் இவர் செல்லவே மாட்டார். பெண்களோடு அதிகம் பேசக்கூட மாட்டார்.
வேறு வழியே இல்லை பேசி ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையில் மட்டும் அவர்களிடம் பேசுவார். சுமார் 55 வருடங்களாக இவர் தனியாகவே வாழ்ந்து வருகிறார் என கூறப்படுகிறது.
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும்போது கூட ஏதாவது பெண் அதை விற்பனை செய்கிறார் என்றால் அதை அவரிடம் தூக்கி போட சொல்லி எடுத்து கொள்வாராம். அந்த அளவிற்கு பெண்கள் என்றாலே ஆகாது என்று வாழ்ந்து வருகிறார் இந்த விசித்திர மனிதன்.