பொதுவாக ராசிகளுக்கான பலன்கள் கிரக சஞ்சாரத்தின் படி கணிக்கப்படுகின்றன.
அந்த வகையில், ஜூன் 30ம் தேதி நடக்கவிருக்கும் சனி வக்கிர பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசிகளில் நாம் எதிர்பார்க்காத நல்ல பலன்கள் வர போகிறது.
மேலும் ராசிகளின் தலையெழுத்தையே மாற்றும் சனி பகவான் அடிக்கடி மாறக்கூடியவர் அல்ல. அவரின் பெயர்ச்சி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் இருக்கும்.
இதன்படி, சனி பகவான் ஜீன் 30 முதல் மேஷ ராசிக்கு இடம் பெயரவுள்ளார்.
இந்த பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் அதிஷ்டங்கள் என்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக ராசிகளில் முன்னும், பின்னுமாக நகர்ந்து பலன்களை மாற்றுவார். ஆனால் சில வேளைகளில் நட்சத்திர ரீதியாக முன்னும் பின்னும் நகருவார் இதனையே நாம் “வக்ர பெயர்ச்சி ” என்கிறோம்.
இதன்படி, தற்போது சனி கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார்.
இது தான் கும்ப ராசியில் கடைசி நட்சத்திரம் என்பதால் எதிர் வரும் ஜீன் 30 பின்னோக்கி சதய நட்சத்திரத்திற்கு செல்கிறார். அடுத்து, எதிர்வரும் அக்டோபர் 5ம் திகதி மேலும் பின்நோக்கி அவிட்டம் நட்சத்திரத்தை சென்றடைவார்.
இதுவரையில் இருந்த சொத்து பிரச்சினை, கடன் பிரச்சினை, பண நெருக்கடி இப்படியான பிரச்சினைகள் எதிர்வரும் ஜீன் 30வுடன் மாறப்போகிறது. கடன்கள் வாங்கி இனி அவஸ்தைப்படவும் அவசியமில்லை.
வீட்டில் இருக்கும் பிரச்சினைகள், குடும்பத்திலுள்ளவர்கள் உங்களை வேண்டாம் என ஓதுக்கியிருப்பார்கள். இது போன்ற குடும்ப பிரச்சினைகளும் இந்த பெயர்ச்சியால் மாறப்போகிறது.
திருமணங்களால் அதிகமான இழப்பீடுகளை சந்தித்திருப்பீர்கள். இவை இந்த காலப்பகுதி மாறி, வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.
பல நாட்களாகியும் தேடி வராத வேலை வாய்ப்புகள் கூட இந்த பெயர்ச்சியால் உங்களை வந்தடையும். இனி கவலை என்ற பேச்சிற்கே இடம் இல்லாமல் போக போகிறது.
கால் வலி, இதய ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். இவை மாறக்கூடும். அத்துடன் வேலை மாற்றங்கள் இடமாற்றங்களுக்கு வாய்ப்பு உண்டு.