நாட்டில் பரவிவரும் டெல்டா வைரஸைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மக்கள் நடந்து கொள்ள வேண்டும்.
இல்லையேல் இன்னும் 8 முதல் 10 வாரங்களில் தொற்று நோய் தீவிரமடையும். இது நான்காவது அலைக்கு வழிவகுக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நாட்டின் கோவிட் அச்சுறுத்தல் தொடரும் நிலையில் சுகாதார ஒழுங்கு விதிகளை இன்னும் இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.
இதன்படி எதிர்வரும் 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய சுற்றுநிரூபத்தை வெளியிடுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,