யாழ் -தெல்லிப்பளை, ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது.
தெல்லிப்பளை பிரதேச சபைக்குட்பட்ட ஒட்டகப்புலத்தில் அண்மையில் 234.8 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.
விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும், இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று தெரிவித்தார்.
இதன்போது ஒட்டகப்புலம் பகுதிக்கு விஜயம் செய்தஆளுநர் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டார். அத்துடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார்.
மேலும் இந்த சந்திப்பில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி ) ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.