யாழில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த 5 பேர் அடங்கிய குழு கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவரை தாயார் கண்முன்னே வீட்டுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
ஈச்சம்பவம் நேற்று முன்தினம் (01-05-2024) காலை 5 மணியளவில் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் நடந்து கொண்டிருந்த போது அயலவர்களால் தொலைபேசியில் பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இருப்பினும், அந்த மருத்துவமனைக்கு வருவதற்குள் மாணவனைத் தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த போது தாக்குதலுக்கு உள்ளான மாணவன் போலீஸ் முறைப்பாடு அளிக்க மறுத்துவிட்டதாக தெரியவருகிறது.
தன்னை தனது நண்பர்கள் தலாக தாக்கியதாக கூறி பொலிஸாரை மாணவன் அனுப்பிவிட்டதாகவும் அயலவர்கள் பதிவு செய்துள்ளார்.