மே தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொட்டகலைக்கு சென்றுள்ளார்.
ரணிலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் வரவேற்றுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வானது கொட்டகலை VC மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து, கொட்டகலை நகரமானது தற்போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்வு ஏற்பாடுகள் போன்ற விடயங்களை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்றைய தினம் மாலை பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.