யாழ்ப்பாண பகுதியில் லாண்ட் மாஸ்ரர் ஹயஸ் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நுணாவிலில் பகுதியில் நேற்றையதினம் (01-05-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெளிநாட்டில் இருந்து வந்தோரை யாழ்ப்பாணம் ஏற்றி வந்த ஹயஸ் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாரதியின் நித்திரையே குறித்த விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.