போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருநாகல் வில்கொடவில் கட்சி அலுவலகம் மீள திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட அலுவலகம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்றையதினம் (28-04-2024) திறந்து வைக்கப்பட்டது.
மேலும் குறித்த நிகழ்வு தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் என முதலில் கூறப்பட்டது.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பாராத வருகை நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.
மஹிந்தவின் திடீர் வருகையால் பெருந்திரளான மக்கள் அவரை வரவேற்க முற்பட்டுள்ளனர்.
இலங்கை வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற பிரச்சாரத்தை நான் இந்த அலுவலகத்தில் இருந்துதான் ஆரம்பித்தேன் என மகிந்த ராஜபக்ஷ கண்ணீருடன் நினைவு கூர்ந்தார்.
இந்த அலுவலகம் முன்பை விட இன்று அழகாக இருக்கிறது என மக்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.