அனைத்து பெண்களும், ஆண்களும் தெய்வத்திற்கு ஆரத்தி காட்டியிருப்பீர்கள். ஆனால் அதில் உள்ள முக்கியத்துவம், குறிப்பு என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தினமும் காலை, மாலை என இரண்டு வேளை கடவுளை வழிபடுவது மிகவும் மங்களகரமானது என்பது நம்பிக்கை. ஆனால் தீபம் எந்த திசையில் ஏற்ற வேண்டும். எப்படி ஆரத்தி காட்ட வேண்டும். எத்தனை முறை சுற்ற வேண்டும் போன்ற விஷயங்கள் எல்லாம் பலருக்கும் தெரியாது. இந்த பதிவில் இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடவுளுக்கு ஆரத்தி செய்யும் போது முதலில் பூஜை தட்டில் பூக்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆரத்திக்கு முன்பும், பின்பு சங்கு ஊதுவதில் கவனம் செலுத்த வேண்டும். முடிந்தால் ஆரத்தியின் போது கூட சங்கு ஊதலாம்.
ஆரத்தி செய்யும் போது ஓம் என்ற எழுத்தின் வடிவத்தில் தட்டை சுற்ற வேண்டும். பிறகு கடவுளின் பாதங்களை நோக்கி 3 முறையும், தொப்புளை நோக்கி 2 முறையும், இறுதியாக வாயை நோக்கி ஒருமுறையை சுழற்ற வேண்டும். மொத்தமாக 7 முறை சுற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆரத்தியின் போது எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் இருந்து சூடத்தை ஏற்றுவதை பலரும் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அது தவறு என்பதை நினைவில் கொள்ளுங்கள். தனியாக தீப்பெட்டியில் தான் ஆரத்திக்காக சூடத்தை ஏற்ற வேண்டும்.
கடவுளுக்கு ஆரத்தி காட்டும் போது கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும். உங்களால் உடல்ரீதியாக நிற்க முடியவில்லை என்றால் கடவுளிடம் மன்னிப்பு கோரி ஆரத்தியை பார்க்கலாம், செய்யலாம்.
கிழக்கு திசை விஷ்ணுவின் திசையாக கருதப்படுகிறது. அதனால் இந்த திசையில் நீங்கள் ஆரத்தி காட்டும் போது, உங்களுக்கு அவரின் ஆசி கிடைக்கும். மேலும், முன்னோர்களின் திசையாக தெற்கு திசை கருதப்படுகிறது. இந்த திசையில் ஆரத்தி காட்டும் போது முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து உங்களுக்கு ஏற்படக்கூடிய அகால மரணத்தில் இருந்து தப்பிக்கலாம்.