இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் ஹோட்டல்களுக்கு விநியோகிக்கப்படும் ஐஸ் கட்டியில் உறைந்த நிலையில் எலி சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹோட்டல்களுக்கு விநியோகிக்கப்பட்ட பனிக்கட்டி ஒன்றில் உறைந்த நிலையில் எலி சடலம் கண்டறிப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள் முதல் தெருவோர கடைகள் வரை விநியோகிக்கப்படும் இந்த ஐஸ் கட்டிகளில் செத்த எலி இருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வாட்ஸ்ஆப் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் உள்ளிட்ட கண்காணிப்பு அதிகாரிகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும் இந்த ஐஸ் கட்டிகள் விநியோகம் செய்யப்பட்ட இடங்கள், ஐஸ் கட்டி தொழிற்சாலைகள் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.