நீ பாதி நான் பாதி கண்ணே என்பது மாதிரி நாமல் ராஜபக்ஷ குழுவில் பாதி பேர் நாமலுக்கும் ரணிலுக்கும் ஆதரவு வழங்குவதாக சமூக வலைத்தளத்தங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.
கண்டியில் உள்ளூராட்சி நிறுவனங்களின் முன்னாள் பிரதிநிதிகளான நாமல் ராஜபக்ஷ குழுவில பாதி பேர் ரணிலை சந்தித்த போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (2024.04.08) கண்டியில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அந்த குழுவினர் இதனை கூறியுள்ளனர்.
ஆனால் கடந்த மாதம் மாத்தளையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் மாத்தளையில் இடம்பெற்றதுடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவே வேட்பாளராக முன்வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தின் போது நாமல் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.