ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தற்போது கும்பத்தில் இருக்கும் சனி பகவான் வியாழனுக்கு இடம்பெயரப்போகின்றார்.
குறித்த நிகழ்வு ஏப்ரல் 6 ஆம் திகதி மதியம் 3.35 மணிக்கு இடம்பெறப்போகின்றது. இந்த சனி மாற்றத்தால் குறிப்பிட்ட சில ராசியினர் சாதகபலன்களைப் பெறப்போகின்றனர்.அப்படி பலனடையப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த சனி மாற்றமானது தொழில் ரீதியாக சிறந்த முன்னேற்றத்தை கொடுக்கும்.
எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை தேடிவரும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் மாற்றத்தால் அதிகமாக சாதக பலன்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்தும் பெற்றிப்பெறும் தன்மை காணப்படுகின்றது.
கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த சனி மாற்றம் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை கொடுக்கும். தொழல் ரீதியில் சிறந்த முன்னேற்றத்தை கொடுக்கும் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
சனியின் மாற்றத்தால் ரிஷப ராசியினர் வியாபாரம் மற்றும் தொழில் விடயத்தில் வெற்றியடைவார்கள்.
தொழிலில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இது வரையில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். காதல் விடயத்தில் மகிழ்ச்சி பெருகும்.