யாழில் உள்ள பல பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்படி, கடந்த சில நாட்களாக சங்கானை பிரிவு பொது சுகாதார பரிசோதகர், வட்டுக்கோட்டை பிரிவு பொது சுகாதார பரிசோதகர், அராலி பிரிவு பொது சுகாதார பரிசோதகர், சுழிபுரம் பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள், தங்கள் பிரிவுகளில் திடீர் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
குறித்த பரிசோதனை நடவடிக்கையின் போது, திகதி காலாவதியான உணவு பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்றாத உணவகங்கள் என 14 உணவகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள் சிக்கிக்கொண்டன.
இந்த 14 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்றையதினம் (21.03.2024) மல்லாகம் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
நேற்று வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம், உணவக உரிமையாளர்களிற்கு 174,000/= தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளது.