தோனியின் 13 ஆண்டுகால அணிதலைவர் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது. ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ருத்ராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க போஸ்டர் மூலம் உறுதியாகியுள்ளது.
வழக்கமாக ஐபிஎல் தொடர் தொடங்கவுதற்கு முன்னர் அனைத்து அணிகளின் தலைவர்களும் ஐபிஎல் கிண்ணத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.
அந்த வகையில் சென்னை அணியின் தலைவராக துடுப்பாட்ட வீரர் ருதுராஜ் கெய்க்வாட் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால அணிதலைவர் பயணம் நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.