இலங்கையில் தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெபரல் அமைப்பு இது குறித்து எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அமைச்சரவையில் யோசனைத் திட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத் தேர்தல் முறையை தொகுதிவாரி மற்றும் விருப்பத்தெரிவு அடிப்படையில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணயம் தொடர்பில் ஓர் பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையில் அதனை மேற்கொள்வதற்காக கால வரையறை தீர்மானிக்கப்பட வேண்டும்.
எல்லை நிர்ணயம் செய்யும் பணிகள் பூர்த்தியாகவிட்டாலும் தேர்தலை நடத்தக் கூடிய வகையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படும் வகையில் யோசனைக் உள்ளடக்கப்படவேண்டுமென பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கில் அரசாங்கம் தேர்தல் முறையில் மாற்றம் செய்ய முயற்சிப்பதாக முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளார்.