இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் .
யுவராஜ் சிங் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கண்டியில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக தங்கியுள்ளார்.
பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் உலக லெஜண்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காகவே அவர்கள் கண்டி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .