வைட்டமின்கள், புரதம், தாதுப் பொருட்கள், சக்தி தரும் இனிப்பு, கொழுப்புச் சத்து, நார்ச்சத்து என அனைத்தையும் கொண்டது சீத்தாப்பழம்.
சாப்பாடு சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? உடல் எடை கூடி விடும், கொழுப்புச் சத்து, சர்க்கரை ஏறி விடும் என்ற பயம் ஸ்வீட் சாப்பிட விடாமல் உங்களைத் தடுக்கிறதா? ஸ்வீட்டிற்குப் பதில் ஒரு சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்.
இனிப்பு சுவையும் கிடைக்கும், நார்ச்சத்து மிகுந்திருப்பதால் சர்க்கரை அளவும் கூடாது, நல்லதைப் பயக்கும் சத்துக்களும் கிடைக்கும்.
சமைத்த உணவில் இந்த வைட்டமின் விரயமாகிவிடுவதால் பழங்களைச் சாப்பிடுவதன் மூலமே நாம் இந்த வைட்டமினை அன்றாடம் பெற முடியும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும் சீத்தாப்பழம்
சீதாப்பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதால் பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல் ஆகியவற்றையும் குணப்படுத்தும்.
மன அழுத்தத்தை சரி செய்யும் சீத்தாப்பழம்
இரவில் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டுப் பாருங்கள், நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். இதற்குக் காரணம் இப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் தாதுப் பொருட்கள்தான். இவை இரண்டிற்குமே மன அழுத்தத்தை சரிப்படுத்தும் குணம் உண்டு.
குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க செய்யும்
சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.