பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு இல்லாமல் யாரும் ஜனாதிபதியாக அமரமுடியாது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று (05) காலை இலங்கை வந்தடைந்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
மாற்றம் செய்ய வேண்டிய இடங்களில் நான் அதைச் செய்கிறேன். நான் எப்போதும் டிசம்பரில் செல்வேன், நான் என் குழந்தைகளுடன் ஒரு வருடத்தில் சில நாட்கள் மட்டுமே செலவிடுகிறேன், நான் அந்த சில நாட்களை செலவழித்துவிட்டு திரும்பி வருகிறேன்.
எதிர்காலத்தில் நான் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. எந்தத் தேர்தல் நடந்தாலும் அதனை ஏற்பாடு செய்ய என்னால் முடியும்.
யார் ஜனாதிபதியானாலும் மொட்டுக்கட்சியின் ஆதரவுடன் தான் ஜனாதிபதியாவார் என தெரிவித்தார். தமது கட்சி பலம்வாய்த கட்சி என்றும் அதனாலேயே தான் முன்னின்று பணிகளை ஏற்ற மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றோம்.
ஒருபோதும் மக்களை நாம் ஏமாற்றியதில்லை. சில இடங்களில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம், அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை, நாங்கள் சொல்வதை மக்கள் ஏற்கவில்லை என்றார்.