நெல்லிக்காயில் விட்டமின் சி இருப்பதோடு, நெல்லியை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்து என எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
நெல்லிக்காயில் முக்கியமாக தேன் கலந்த தேநீர் தினமும் பருகினால் எத்தனை நன்மைகள் என நாம் இன்று பார்ப்போம்.
வைட்டமின் சி சத்து நிறைந்தது
வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள்
நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது. அது அழற்சியை குறைக்கிறது. நீண்டநாள் உடல் உபாதைகளை தடுக்கிறது. தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிடும்போது அது மூட்டு வலியை குணப்படுத்துகிறது. வீக்கத்தை தடுக்கிறது.
செரிமானத்துக்கு உதவுகிறது
வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது. இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும்.